சித்திரை புத்தாண்டை கொண்டாடும் அனைத்து சகோதர நண்பர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இடைக்காடு உறவுகள் அங்கு வாழ்கின்ற விவசாய பெருமக்கள் அனைவருக்கும் இடைக்காடு வலைய இணைய புது வருட வாழ்த்துக்கள்.
தமிழ் புது வருடத்தை முன்னிட்டு இடைக்காடு வாழ்
தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இடைக்காடு வாழ் இளைஞர்களால் சிநேகபூர்வ துடுப்பாட்ட, உதைபந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் மணமானவர் எதிர் மணமாகதோர் என்ற அடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அவை முறையே வியாழக்கிழமை 4 மணியளவில் துடுப்பாட்டமும். வெள்ளிக்கிழமை 8 மணியளவில் கரப்பந்தாட்டமும், சனிக்கிழமை 5 மணியளவில்உதைபந்தாட்டம் என்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் இடைக்காடு இளைஞர் குழு அழைக்கின்றது.
துயர் பகிர்வு செய்தி
திருமதி ஜெயராணி யோகிராஜ் இன்று 12/ 4/ 2023 கனடாவில்இறைபதம் அடைந்துள்ளார். மேலதிக விபரங்கள் பின்னர் அறிய தரப்படும் .
Service Details :
Sunday, April 16th, 2023 5:00 P.M – 9:00 P.M
Monday, April 17th,2023 5:30 A.M – 7:30 A.M
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
MARKHAM,ON
அன்னாரின் குடும்ப துயரத்தில் இடைக்காடு வலை இணைய குழுமமும் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.
தகவல்: குடும்பத்தினர்.
கல்வி சுற்றுலா
பட்டிப் பொங்கல்
புலம்பெயர்ந்த தேசங்களில் நம்மவர்களின் கூத்துக்கள்
வருகின்ற சில நாட்களுக்கு குளிர் நாட்களாகவே இருக்கப் போகின்றது., இருப்பினும் இவை அனைத்தையும் கடந்து செல்வது தான் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற அனைவருடைய தினசரி வாழ்க்கையாக அமைந்துள்ளது .இந்த வகையிலே இன்றைய கருத்தாடல்களில் உன்னிப்பாக நாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலே அவதானித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று விளைகின்றோம் .குறிப்பாக ஒரு மனிதனுடைய வாழ்வில் முழுமை பெற்று இறுதியாக அவனுடைய வாழ்வை இவ்வுலகில் முடித்துச் செல்லும்போது தமிழ் சமூகங்களிலே மேன்மையான இறுதி வணக்கங்களையும் அல்லது அவர்களுக்குரிய மரியாதைகளையோ நாங்கள் செலுத்துவது வழமையான ஒன்று. அந்த வகையிலே இங்கு நாங்கள் உன்னிப்பாக அவதானித்த சில விடயங்களை வெளிக்கொண்டு வருவது எமது கலாச்சாரத்தை எமது பழக்க வழக்கங்களை சற்று சீர்தூக்கி பார்க்க வேண்டிய ஒரு தேவை இருப்பதாகவே உணர்கின்றோம்.
இறுதி வணக்கத்துக்கு அல்லது அஞ்சலி செலுத்தும் மண்டபத்துக்கு நாம் செல்லும்போது அவதானித்த சில விடயங்களை பார்ப்போம்.
ஆண்கள் வெள்ளை சட்டை அல்லது கருப்புச்சட்டை அதனுடன் கருப்பு நிறத்தில் ஆன முழுகால் சட்டை அணிந்து வருகிறார்கள்’ ஆனால் அவர்கள் அஞ்சலி செலுத்தும் இடத்துக்குச் செல்லும்போது தலையில் தொப்பி, அதற்கு மேலே குளிருக்கு போடுகின்ற ஓவர் கோட், கண்ணாடியை தலைக்கு மேலே வைத்தல், பாத அணிகளுடன் அந்த இடத்திற்கு செல்லல், மேலும் இரண்டு பட்டனை சட்டையிலிருந்து கழட்டி மேலும் அதற்கு மேலே ஒரு ஓவர் கோட்டை போட்டுக் கொண்டு அந்த அஞ்சலிக்கு அவர்கள் செல்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.
சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள் நாங்கள் பாடசாலைக்குப் போகும் போதும் அல்லது பேருந்துக்கு செல்வதற்கோ அல்லது அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது ஒரு ஒழுங்கு முறையில் மற்றவர்களை மதித்து நடக்க பழகிய நாங்கள் எமது கலாச்சாரமும் ஒரு அஞ்சலிக்காக செல்கின்ற இடத்தில் ஒரு கோமாளிக்கூத்தாக நடப்பதை எண்ணி வெட்கப்பட வேண்டாமா?
இங்கு எவ்வளவோ அதீத வசதிகள் உள்ள ஒரு தேசம் ,மண்டபத்துக்கு குளிர்காலத்தில் வெப்பமூட்டியும், ஓவர் கோட் வைப்பதற்கு அதற்குரிய வசதிகளும்,பாதணிகள் பத்திரமாக கழட்டி வைப்பதற்குரிய இடங்களும், இன்னோரன்ன சகல வசதிகள் உள்ள இத் தேசத்தில் ஒரு கேலிக்கூத்தாக ஒரு மனிதனுடைய இறுதி அஞ்சலிக்கு நாங்கள் செய்கின்ற செயல்களை என்னவென்று சொல்வது??!!! உறவுகளே! சிந்திப்போம்!! தாய்க்குலத்துக்கு தலை சாய்த்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஏனெனில் அவர்கள் முழுமையாக கலாச்சாரத்தையும் அவர்களுக்குரிய அஞ்சலிகளையும் செவ்வனே செய்கின்றார்கள்., என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.வருகின்ற கிழமையும் உறவுகளின் அஞ்சலிக்காக நாம் சந்திக்க இருக்கின்றோம். புதிய ஒரு அத்தியாயத்தை உங்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் சொல்வோம் நன்றியுடன் .
கடுமையான பனிப்புயலால் ரொறன்ரோ
இடைக்காடு ம.வி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் இடைக்காடு ம.வி தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்.
35 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 70 புள்ளிகளுக்கு மேல் 94.28 வீதம்(%) மாணவர்களும்.,
100 புள்ளிகளுக்கு மேல் 82.85 வீதம்(%) மாணவர்களும்.,
12 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களுக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும், ஆக்கமும் ஊக்கமும் அளித்த பெற்றோர்களுக்கும், பரீட்சையில் சித்தி அடைந்த மாணவச் செல்வங்களுக்கு இடைக்காடுவலை இணையத்தின் வாழ்த்துக்கள்.
மதிவாணன் அக்சயா – 183
சிறிபதி திசானி -174
யுஸ்ரின் கென்றி -172
சிறிசேதுபரன் றட்சிகா -169
திலீபன் தரணிகா -167
சத்தியசீலன் கபிசன் -166
ருபிதரன் அகாஸ்ரெனின் -160
இராகவன் துசந்தி -157
றயினோல்ட் சுவேதா -156
அருள்ரூபன் திசானி – 151
நகுலன் கேசகி -144
கணேசவேல் கபித் – 144
தகவல் : பழைய மாணவன்
வரவேற்பு விழா
யா/இடைக்காடு மகாவித்தியலயத்திற்கு புதிய அதிபராக திரு. குமாரசாமி அகிலன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை வரவேற்கும் நிகழ்வு 19.12.2022 திங்கட்கிழமை காலை 7:30 மணிக்கு ஆரம்பமானது.
நிகழ்வினை பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு படுத்தி நெறிப்படுத்தியிருந்தது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் எமது பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள், பெற்றோர்கள்,வெளி நாட்டு வாழ் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
வரவேற்பு உரையினை தொடர்ந்து பாடசாலையின் பிரதி அதிபர், திருமதி.க. லலீசன், ஓய்வு நிலை கல்வி பணிப்பாளர் திரு. க. முருகவேல், எமது பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர்களான திரு. அ. அருந்தவனேசன், திரு. கு. வாகீசன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு. நா. சுவாமினாதன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. ச. ஶ்ரீபதி, பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. கஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றியிருந்தனர்.
இறுதியாக புதிய அதிபரின் ஆரம்ப உரையுடன் நிகழ்வு காலை 8:30 மணிக்கு நிறைவடைந்தது.
எமது பாடசாலையின் புதிய அதிபரை இடைக்காடுவலை இணையமும் வாழ்த்தி மென்மேலும் வளர்ச்சிப் பாதையில் செல்வோமாக…