உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் – உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
செய்திகள்
Get the latest news regarding our Idaikkadu community.
அந்நிய தேச புது வருட வாழ்த்துக்கள்
செயல்திறன் மிக்க Fellow Farmer
Sankani Kulam
சாங்காணி குளம்
செயல்திறன் மிக்க Fellow Farmer
உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் இன்று நான்காவது நாளாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு துளி நீரும் விரயம் ஆகா முடியாது எமது மண்ணுக்குத்தான், என்ற அடிப்படையில் அயராது வேலைகளை விரைவு படுத்தியுள்ளோம். அந்த ஆர்வத்துக்கும் உழைப்புத் திறனுக்கும் புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து எங்களுடைய நிதி பங்களிப்பு கோரிக்கைகளுக்கு, எங்களின் வேகத்துக்கு இணையாக உங்களின் நிதி பங்களிப்பும், எங்களுக்கு மேலும் மேலும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றது. மேலும் மிகவும் மதிப்புமிக்க ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு குளத்தினை மிக தரம் வாய்ந்த உறுதி வாய்ந்த நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடிய வேலைத்திட்டங்களை அமைத்து செயல்படுவதற்கான பூர்விகா ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது. அவை பற்றிய விபரங்கள் பின்னர் உங்களுக்கு தெளிவாகவும் விரைவாகவும் நாங்கள் அனுப்பி வைப்போம். உங்களுடைய பங்களிப்பை தொடர்ந்து பங்களித்து இந்த வரலாற்றுப் பணியை நிறைவு பெற உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் நாம் அனைவரும் இணைந்து ஒரு புதிய ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம். நன்றி.
தொடர்புகளுக்கு : ஜெயகுமார் e-Transfer comboo85@gmail.com
பங்களிப்புச் செய்தோரின் பட்டியல் தொடர்கின்றது…………..
முருகேசமூர்த்தி தம்பி
ஸ்ரீ கமலன் ஆறுமுகம்
பவான் விசுவலிங்கம்
சசிதீபன் நல்லதம்பி
ராகவன் வினாசிதம்பி
அருணகிரி கந்தசாமி
சபேசன் ராஜலிங்கம்
Sankani Kulam சாங்காணி குளம்
விவசாய பெரியோர்களே!! சிறியோர்களே!
உங்களுக்கு விஷயம் தெரியுமா? எமது ஊரில் நீண்ட காலமாக காணாமல் போன சாங்காணி குளத்தை கண்டுபிடித்து தந்து விட்டார்கள் ஐயா தந்து விட்டார்கள்.!!!
புலம்பெயர்ந்த தேசத்திலே வாழ்பவர்களில் 90 விதமான கிராம மக்கள் இந்த குளத்தை மறக்கவே மாட்டார்கள். நீங்கள் கொடுப்புக்குள் சிரிப்பது எனக்குத் தெரிகின்றது, ஏனென்றால் கோவனத்துண்டுகளோடும்,காட்சட்டைகளோடும், ஜங்கிகளோடும் ஏன் இன்னும் சொல்லப்போனால் அந்த வாழ தண்டிலே ஏறி குதித்து நீச்சல் அடிச்ச போதும் , இன்னும் பல பல ஞாபகங்கள் வந்து போவது தானே உங்கள் மனதில் இப்போது இருக்கின்றது . என்ன செய்ய அது ஒரு பொற்காலம். ஏன் ?? இப்ப என்ன இங்கேயும் பொற்காலம்தான். அதுவும் ஒரு இனிமையான காலம் தான் இதுவும் ஒரு இனிமையான காலம் தான் காலத்தால் நடப்பதை ஏற்று நடப்பதே எமது வாழ்வு.
ஆனால் நாங்கள் வாழ்ந்த வாழ்வையும், எதிர்காலத்தில் வாழ இருப்பவர்களுக்கு செய்து விட்டு செல்கின்ற ஒரு இனிமையான வாழ்வையும் எண்ணி வாழ்வது அல்லது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று எமது வளங்களையும் எமது மண்ணையும் பாதுகாத்து கொடுப்பதுவே ஒரு முழுமையான ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வாக அமைகின்றது. அப்படி இல்லையா ? விவசாய தோழர்களே!!!
வாருங்கள் சாங்காணி பற்றிய விவரங்களை விரிவாக பார்ப்போம் : முதலாவதாக இடைக்காடு விவசாய பெருமக்களின் பெரு முயற்சியால் இக்குளம் ஒழுங்கமைப்புடன் திருத்தி அமைக்கப்பட உள்ளது. அரசினால் அனுமதி பெற்று இதனை இன்று(04/10/2024)கோண நாச்சியாரின் மேற்பார்வையில் செய்வதற்கு எல்லோரும் இணைந்து செயல்படுகிறார்கள். அதன் ஒரு பகுதியாக அவர்கள் புலம்பெயர்ந்த தேசத்தில் இருப்பவர்களின் நிதி பங்களிப்பினையும் எதிர்பார்க்கிறார்கள். அதை மிகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நேர்த்தியாகவும் நீண்ட ஒரு தொலைநோக்க அடிப்படையிலே உறுதியாக செய்வதற்காக சில ஆலோசனைகளை நாங்களும் முன் வைத்துள்ளோம். அந்த வகையிலே அந்த அணையின் உடைய வேலை திட்டங்கள் நேற்று ஆரம்பமாகியுள்ளது.அதன் முதல் கட்டமாக அவர்கள் அந்த மண்ணை வலித்து அணை மாதிரி அமைத்து, பின்னர் கருங்கல்கள் மிகவும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு மூன்று பக்க அணைகளை இப்போது முதல் படியாக செய்ய இருக்கிறார்கள்.
பின்னர் பொறியியல் துறை வல்லுனர்களின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட வேலை திட்டங்கள் ஆரம்பமாகும்., இந்த கடமைகளை நாங்கள் அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய காலகட்டாயத்தில் இருக்கின்றோம்.அங்கே இருக்கும் விவசாய தோழர்கள் பற்றி உங்கள் மனதில் எழுகின்ற சந்தேகங்கள் என் மனதிலும் எழுகின்றது இருப்பினும் எங்கள் கடமைகளை நாங்கள் எல்லோரும் இணைந்து சரிவர செய்கின்றோம்.
நேரமும் காலமும் ஓடிக் கொண்டிருக்கின்றது., அந்த வேகத்துக்கு நாங்கள் ஈடு கொடுத்து செயல்படுவோமாக இருந்தால் எல்லாத்தையும் வெற்றியோடு நாங்கள் செய்து முடிக்க முடியும். எனவே அனைத்து விவசாய தோழர்களை நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால் உங்களால் முடிந்த குறைந்த அளவான நிதி பங்களிப்பினை செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் குறிப்பாக நான் உங்கள் அனைவரோடும் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும் இன்னும் பல விஷயங்கள் உங்களுடன் கதைக்க வேண்டிய உள்ளது,இருப்பினும் இதை மிக விரைவாக எழுத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதினால் இத்துடன் முடித்து உங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி உங்களில் ஒருவன்.
அறிவுள்ள ஆரோக்கியமான வாழ்வை அமைப்போம்!!! இன்றே செய்வோம் நன்றே செய்வோம்!!!
தொடர்புக்கு 4168170604.
ஜெயகுமார் சுப்ரமணியம்.
05/10/2024.
இதுவரையில் ஒத்துழைப்பு வழங்கியவரின் பெயர் விபரம் இதில் உங்களின் பெயரும் இருக்கிறதா ??? வாருங்கள் விவசாய தோழர்களே அனைவரும் சேர்ந்து வடம் பிடிப்போம்.
மகேஸ்வரன் நாகமுத்து
பொன்னீஸ்வரன் வைரமுத்து
சிவகாமிபிள்ளை சுப்ரமணியம்
சுதர்சன் செல்லத்துரை
இளங்கோ வேலுப்பிள்ளை
ஈஸ்வரமூர்த்தி முருகப்பிள்ளை
நாகேஸ்வரமூர்த்தி தம்பு
நவரதி சந்திரபாபு
பிரேமா சுப்பிரமணியம்
பிரதீபன் நல்லதம்பி
கருணாகரன் நடராஜா
இலக்கியன் ஜெயகுமார்
நவகுமார் சுப்ரமணியம்
பிரசாத்
சிவா ரூபன்likes (0)Comments (0)
இடைக்காடு மகாவித்தியாலய நூற்றாண்டு விழா
இடைக்காடு மகாவித்தியாலய நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்வதற்கான கலந்துரையாடல்
காலம் : பங்குனி 03 2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி
இடம் : அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆசிரியர் அறப்பணி நிலையம், இடைக்காடு
சமூகம் அளித்தோர் விபரம்
- பேராசிரியர்.கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி (பழைய மாணவரும் இளைப்பாறிய கல்வியற் துறை பேராசிரியரும்)
- திரு.நாரயணபிள்ளை சுவாமிநாதன் (பழைய மாணவரும் இளைப்பாறிய உதவி கல்விப் பணிப்பாளரும்)
- திரு.வல்லிபுரம் வைத்திலிங்கம் (பழைய மாணவரும் இளைப்பாறிய நிர்வாக உத்தியோகத்தரும்)
- திரு.கந்தசாமி முருகவேல் (பழைய மாணவரும் இளைப்பாறிய வலயக் கல்விப் பணிப்பாளரும்)
- திரு.தம்பிராசா கிருபாகரன் (பழைய மாணவரும் வலயக் கல்விப் பணிப்பாளரும்)
- திரு.அரசகேசரி வேலாயுதர் (பழைய மாணவரும் கோட்டக் கல்விப் பணிப்பாளரும்)
- திரு.சின்னதம்பி கருணா (பழைய மாணவரும் நில அளவை அத்தியட்சகரும்)
- திருமதி.மங்களேஸ்வரி வேலுப்பிள்ளை (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
- திருமதி,பரமேஸ்வரி கதிரவேலு (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
- திருமதி.ஆனந்தஈஸ்வரி நாகநாதன் (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
- திரு.ஜெயகுமார் சுப்ரமணியம் (பழைய மாணவர் – கனடா)
- திரு.சுதர்சன் செல்லத்துரை (பழைய மாணவர் – கனடா)
- திரு.நாரயணபிள்ளை இடைக்காடர் ஈஸ்வரன் (பழைய மாணவர் – கனடா)
- திரு.நந்தகுமார் இராசையா (பழைய மாணவர் – ஐக்கிய இராச்சியம்)
- திரு.கிருஷ்ணமூர்த்தி செல்லமுத்து (பழைய மாணவர் -அவுஸ்ரேலியா)
- திருமதி.பவானி கிருஷ்ணமூர்த்தி (பழைய மாணவர் – அவுஸ்ரேலியா)
- திருமதி.சிவச்செல்வி குகதாசன் (பழைய மாணவர் -அவுஸ்ரேலியா)
- திருமதி.கோமளா கருணாகரன் (பழைய மாணவரும் ஆசிரியையும்)
- திரு.சிவகுருநாதன் கருணாகரன் (நலன் விரும்பி)
- திருமதி.வரதலட்சுமி ஸ்ரீவடிவேலு (பழைய மாணவரும் ஆசிரியையும்)
- திருமதி.தயவாதி சிவஞானசீலன் (பழைய மாணவரும் ஆசிரியையும்)
- திரு.செல்லத்துரை செல்வவேல் (பழைய மாணவரும் ஆசிரியரும்)
- திரு.சுப்பிரமணியம் செல்வகுமார் (பழைய மாணவரும் மாகாண உள்ளக கணக்கு உத்தியோகத்தரும்)
- திரு.கதிரவேலு நகுலன் (பழைய மாணவரும் பதவிநிலை முகாமைத்துவ உத்தியோகத்தரும்)
- திரு.கந்தசாமி கஐன் (பழைய மாணவரும் பழைய சங்க செயலாளரும்)
- திரு.சிவஞானம் கார்த்தீபன் (பழைய மாணவர், ஆசிரியர், பழைய சங்க பொருளாளர் மற்றும் கலைமகள் வாசிகசாலை தலைவர்)
- திரு.சிவஞானசுந்தரம் சிறிபதி (ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும்)
- திரு.கந்தசாமி கேதீஸ்வரன் (பழைய மாணவரும் இடைக்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும்)
- திரு.வை.கதிர்காமநாதன் (பழைய மாணவர்)
கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அறிக்கை
2026 ஆம் ஆண்டு தை 16 ஆம் திகதி எமது பாடசாலையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கப்பட்டு, அது தொடர்பாக புலம்பெயர்ந்த உறவுகளின் சிந்தனை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
அதன் முதற் கட்டமாக ஆரம்பப் பிரிவில் சகல வசதிகளுடன் கூடிய ஆரம்ப பிரிவு கட்டடத்தை மூன்று மாடிகளாக கட்டலாம் என்ற எண்ணக்கரு முன் வைக்கப்பட்டது. அக் கருத்து வரவேற்கப்பட்டதுடன், மாற்று கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன அவை வருமாறு:
இடைநிலை பிரிவு பிரதான மண்டபம் மீள் புதுப்பித்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அமரர்.நமசிவாயம் அவர்களின் கட்டடம் மீள் திருத்த வேண்டிய அவசியம் பற்றி கூறப்பட்டது.
கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாதிக்க முடியும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
பாடசாலை மைதானம் உருவானதை போல எதையும் செய்ய முடியும் என்று வலியுறுத்தினார்கள்.
இடைக்காட்டின் வரலாறு மிகச் சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் ஆலோசிக்கப்பட்டது.
இடைக்காட்டின் வீதிகள் சீரமைக்கப்பட்ட பின் பெயரிடப்பட்ட வீதியாக மாற வேண்டும் என்றும் கருத்துரைக்கப்பட்டது.
புலம் பெயர் உறவுகள் தொடர்ச்சியாக நிதி உதவி வழங்க முடியாது என்பதால், முன் பள்ளிக்கு குறிப்பிட்ட நிதி வழங்கியது பற்றி திரு க. முருகவேல் அவர்கள் தமது கருத்தை கூறினார்.
பேராசிரியர்.க.சின்னத்தம்பி பின்வரும் கருத்தை கூறினார். ஆரம்பப் பிரிவு மற்றும் இடைநிலை பிரிவிற்கு இடையேயான வீதியை மாற்றுவது மற்றும் அதன் கடினத் தன்மை பற்றி திரு.கருணா விளக்கமளித்தார்.
பாடசாலை மாணவர் எண்ணிக்கை அதிகரித்து சித்தி வீதம் அதிகரிக்கச் செய்ய வேண்டுமெனவும் உயர்தர பிரிவு விஞ்ஞானத்துறை அச்சுவேலி செல்ல வாய்ப்பு உள்ளது அதை தடுப்பதற்கான செயல்பாடுகளை எமது பாடசாலை சமூகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை திரு.கிருபாகரன் அவர்கள் கூறினார்.
எமது பாடசாலையின் சித்தி வீதம் யாழ் மாவட்டத்திலே மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதாக திரு.அரசகேசரி அவர்கள் கூறினார்.
நூற்றாண்டு விழா ஞாபகார்த்த கட்டடம் கட்டுவது பற்றிய முடிவை எடுக்க திரு.முருகவேல் அவர்கள் வலியுறுத்தினார்.
வீதியை மாற்றுவது கடினமாகையால் ஏனைய செயற்பாடுகள் பற்றி கவனம் எடுக்க கலந்துரையாடப்பட்டது. யதார்த்தமாக செயல்பட வேண்டும் என பேராசிரியர்.க.சின்னத்தம்பி அவர்கள் கூறினார்.
பாடசாலை அழகு படுத்த வேண்டும், இருண்ட பாடசாலை போன்ற தோற்றத்தில் இருந்து வெளிச்சமான மகிழ்ச்சிகரமான அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் என்ற கருத்தை திரு.க.முருகவேல் அவர்கள் கூறினார்.
பாடசாலை அபிவிருத்திக்கு அனைவரது மனங்களும் மாற்றம் அடைய தக்க வகையில் செயல்படுத்த வேண்டுமென பேராசிரியர்.க.சின்னத்தம்பி அவர்கள் கூறினார்.
பொறியியல்துறை, நில அளவைத்துறை சார்ந்தவர்களுடன் முதலில் கலந்துரையாடி கட்டட அமைப்பு பற்றி தீர்மானித்து, அதன் அனுமதிக்காக திணைக்களங்களை அணுக வேண்டும். இந்த பொறிமுறை ஒழுங்கில் செயல்பட வேண்டும என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
நிதி செயற்பாடு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. நிதி செயற்பாடு பற்றி திரு.கிருபாகரன் அவர்கள் கூறுகையில் நிதி பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கில் வைப்பிடப்படல் வேண்டும் என்ற கருத்தை கூறினார்.
எழுந்த மானமாக கட்டிடம் தெரிவு செய்யக்கூடாது அமைவிடம் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது
இறுதி முடிவாக ஆரம்பப் பிரிவு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட வேண்டும். விழாவிற்கான நூல் வெளியீடு, போன்ற செயல்பாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியோருடன் இணைந்து கலந்துரையாடி முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதிபருடன் கதைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இக் கருத்துரையாடல் ஆரம்ப முயற்சியாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் ஆரோக்கியமாகவும் இனிதே நிறைவு பெற்றது .அனைவரது கருத்து பரிமாற்றங்களும் உள் வாங்கப்பட்டு அடுத்த கட்ட கருத்தாளுகைக்காக எமது செயல்கள் ஆரம்பமாகிறது .
நன்றி மீண்டும் அடுத்த கருத்துப் பகிர்வுடன் சந்திப்போம்.
அதிபருடான கலந்துரையாடல் 01.04.2023
சமூகமளித்தோர்
திரு.கு.அகிலன் (அதிபர்)
திரு.கு.வாகீசன் (முன்னாள் அதிபர்)
திரு.அருந்தவநேசன் (முன்னாள் அதிபர்)
திரு.க.முருகவேல்
திரு.வே.அரசகேசரி
திரு.க.நகுலன்
திரு.க.கஜன்
திரு.சி.சிறிபதி
திரு.செ.செல்வவேல்
திரு.க.சூரியகாந்தன்
திரு.கஜேந்திரன்
கலந்துரையாடப்பட்ட விடயம் இணைக்கப்பட்டுள்ளது
இனிய புத்தாண்டு
தமிழ் புது வருடத்தை முன்னிட்டு இடைக்காடு வாழ்
தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இடைக்காடு வாழ் இளைஞர்களால் சிநேகபூர்வ துடுப்பாட்ட, உதைபந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் மணமானவர் எதிர் மணமாகதோர் என்ற அடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அவை முறையே வியாழக்கிழமை 4 மணியளவில் துடுப்பாட்டமும். வெள்ளிக்கிழமை 8 மணியளவில் கரப்பந்தாட்டமும், சனிக்கிழமை 5 மணியளவில்உதைபந்தாட்டம் என்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் இடைக்காடு இளைஞர் குழு அழைக்கின்றது.
கல்வி சுற்றுலா
பட்டிப் பொங்கல்
புலம்பெயர்ந்த தேசங்களில் நம்மவர்களின் கூத்துக்கள்
வருகின்ற சில நாட்களுக்கு குளிர் நாட்களாகவே இருக்கப் போகின்றது., இருப்பினும் இவை அனைத்தையும் கடந்து செல்வது தான் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற அனைவருடைய தினசரி வாழ்க்கையாக அமைந்துள்ளது .இந்த வகையிலே இன்றைய கருத்தாடல்களில் உன்னிப்பாக நாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலே அவதானித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று விளைகின்றோம் .குறிப்பாக ஒரு மனிதனுடைய வாழ்வில் முழுமை பெற்று இறுதியாக அவனுடைய வாழ்வை இவ்வுலகில் முடித்துச் செல்லும்போது தமிழ் சமூகங்களிலே மேன்மையான இறுதி வணக்கங்களையும் அல்லது அவர்களுக்குரிய மரியாதைகளையோ நாங்கள் செலுத்துவது வழமையான ஒன்று. அந்த வகையிலே இங்கு நாங்கள் உன்னிப்பாக அவதானித்த சில விடயங்களை வெளிக்கொண்டு வருவது எமது கலாச்சாரத்தை எமது பழக்க வழக்கங்களை சற்று சீர்தூக்கி பார்க்க வேண்டிய ஒரு தேவை இருப்பதாகவே உணர்கின்றோம்.
இறுதி வணக்கத்துக்கு அல்லது அஞ்சலி செலுத்தும் மண்டபத்துக்கு நாம் செல்லும்போது அவதானித்த சில விடயங்களை பார்ப்போம்.
ஆண்கள் வெள்ளை சட்டை அல்லது கருப்புச்சட்டை அதனுடன் கருப்பு நிறத்தில் ஆன முழுகால் சட்டை அணிந்து வருகிறார்கள்’ ஆனால் அவர்கள் அஞ்சலி செலுத்தும் இடத்துக்குச் செல்லும்போது தலையில் தொப்பி, அதற்கு மேலே குளிருக்கு போடுகின்ற ஓவர் கோட், கண்ணாடியை தலைக்கு மேலே வைத்தல், பாத அணிகளுடன் அந்த இடத்திற்கு செல்லல், மேலும் இரண்டு பட்டனை சட்டையிலிருந்து கழட்டி மேலும் அதற்கு மேலே ஒரு ஓவர் கோட்டை போட்டுக் கொண்டு அந்த அஞ்சலிக்கு அவர்கள் செல்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.
சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள் நாங்கள் பாடசாலைக்குப் போகும் போதும் அல்லது பேருந்துக்கு செல்வதற்கோ அல்லது அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது ஒரு ஒழுங்கு முறையில் மற்றவர்களை மதித்து நடக்க பழகிய நாங்கள் எமது கலாச்சாரமும் ஒரு அஞ்சலிக்காக செல்கின்ற இடத்தில் ஒரு கோமாளிக்கூத்தாக நடப்பதை எண்ணி வெட்கப்பட வேண்டாமா?
இங்கு எவ்வளவோ அதீத வசதிகள் உள்ள ஒரு தேசம் ,மண்டபத்துக்கு குளிர்காலத்தில் வெப்பமூட்டியும், ஓவர் கோட் வைப்பதற்கு அதற்குரிய வசதிகளும்,பாதணிகள் பத்திரமாக கழட்டி வைப்பதற்குரிய இடங்களும், இன்னோரன்ன சகல வசதிகள் உள்ள இத் தேசத்தில் ஒரு கேலிக்கூத்தாக ஒரு மனிதனுடைய இறுதி அஞ்சலிக்கு நாங்கள் செய்கின்ற செயல்களை என்னவென்று சொல்வது??!!! உறவுகளே! சிந்திப்போம்!! தாய்க்குலத்துக்கு தலை சாய்த்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஏனெனில் அவர்கள் முழுமையாக கலாச்சாரத்தையும் அவர்களுக்குரிய அஞ்சலிகளையும் செவ்வனே செய்கின்றார்கள்., என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.வருகின்ற கிழமையும் உறவுகளின் அஞ்சலிக்காக நாம் சந்திக்க இருக்கின்றோம். புதிய ஒரு அத்தியாயத்தை உங்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் சொல்வோம் நன்றியுடன் .