Articles for 2024

திருமதி. மங்கையற்கரசி கந்தசாமி இறைபதம் அடைந்தார்

காலம் சென்ற வே. கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், Dr. முத்துவேல், Dr. செல்வவேல், முருகவேல், தெய்வராணி, செல்வராணி, கதிரவேல் ஆகியவர்களின் பாசமிகு அன்னையாரும, சுஜா, கஜன், பிருத்திகா, பிரசன்னா, சாரங்கன், சரண்யா, சிந்து, துளசிகா, தர்சா, சகானா, ஶ்ரீராம், விசால் ஆகியோரின் பேத்தியாரும், மங்களேஸ்வரி, மனோன்மணி, காலம் சென்ற முருகையா, காலம் சென்ற கைலாயபிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்

அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை Nov 8 தேத்தாவடியிலுள்ள அன்னாரின் தாய் மனையில் காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 12 மணிக்கு சாமித்திடல் மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

செயல்திறன் மிக்க Fellow Farmer

Sankani Kulam
சாங்காணி குளம்

செயல்திறன் மிக்க Fellow Farmer

உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் இன்று நான்காவது நாளாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு துளி நீரும் விரயம் ஆகா முடியாது எமது மண்ணுக்குத்தான், என்ற அடிப்படையில் அயராது வேலைகளை விரைவு படுத்தியுள்ளோம். அந்த ஆர்வத்துக்கும் உழைப்புத் திறனுக்கும் புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து எங்களுடைய நிதி பங்களிப்பு கோரிக்கைகளுக்கு, எங்களின் வேகத்துக்கு இணையாக உங்களின் நிதி பங்களிப்பும், எங்களுக்கு மேலும் மேலும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றது. மேலும் மிகவும் மதிப்புமிக்க ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு குளத்தினை மிக தரம் வாய்ந்த உறுதி வாய்ந்த நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடிய வேலைத்திட்டங்களை அமைத்து செயல்படுவதற்கான பூர்விகா ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது. அவை பற்றிய விபரங்கள் பின்னர் உங்களுக்கு தெளிவாகவும் விரைவாகவும் நாங்கள் அனுப்பி வைப்போம். உங்களுடைய பங்களிப்பை தொடர்ந்து பங்களித்து இந்த வரலாற்றுப் பணியை நிறைவு பெற உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் நாம் அனைவரும் இணைந்து ஒரு புதிய ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம். நன்றி.

தொடர்புகளுக்கு : ஜெயகுமார் e-Transfer comboo85@gmail.com

பங்களிப்புச் செய்தோரின் பட்டியல் தொடர்கின்றது…………..

முருகேசமூர்த்தி தம்பி

ஸ்ரீ கமலன் ஆறுமுகம்

பவான் விசுவலிங்கம்

சசிதீபன் நல்லதம்பி

ராகவன் வினாசிதம்பி

அருணகிரி கந்தசாமி

சபேசன் ராஜலிங்கம்

Sankani Kulam சாங்காணி குளம்


விவசாய பெரியோர்களே!! சிறியோர்களே!
உங்களுக்கு விஷயம் தெரியுமா? எமது ஊரில் நீண்ட காலமாக காணாமல் போன சாங்காணி குளத்தை கண்டுபிடித்து தந்து விட்டார்கள் ஐயா தந்து விட்டார்கள்.!!!

புலம்பெயர்ந்த தேசத்திலே வாழ்பவர்களில் 90 விதமான கிராம மக்கள் இந்த குளத்தை மறக்கவே மாட்டார்கள். நீங்கள் கொடுப்புக்குள் சிரிப்பது எனக்குத் தெரிகின்றது, ஏனென்றால் கோவனத்துண்டுகளோடும்,காட்சட்டைகளோடும், ஜங்கிகளோடும் ஏன் இன்னும் சொல்லப்போனால் அந்த வாழ தண்டிலே ஏறி குதித்து நீச்சல் அடிச்ச போதும் , இன்னும் பல பல ஞாபகங்கள் வந்து போவது தானே உங்கள் மனதில் இப்போது இருக்கின்றது . என்ன செய்ய அது ஒரு பொற்காலம். ஏன் ?? இப்ப என்ன இங்கேயும் பொற்காலம்தான். அதுவும் ஒரு இனிமையான காலம் தான் இதுவும் ஒரு இனிமையான காலம் தான் காலத்தால் நடப்பதை ஏற்று நடப்பதே எமது வாழ்வு.

ஆனால் நாங்கள் வாழ்ந்த வாழ்வையும், எதிர்காலத்தில் வாழ இருப்பவர்களுக்கு செய்து விட்டு செல்கின்ற ஒரு இனிமையான வாழ்வையும் எண்ணி வாழ்வது அல்லது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று எமது வளங்களையும் எமது மண்ணையும் பாதுகாத்து கொடுப்பதுவே ஒரு முழுமையான ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வாக அமைகின்றது. அப்படி இல்லையா ? விவசாய தோழர்களே!!!

வாருங்கள் சாங்காணி பற்றிய விவரங்களை விரிவாக பார்ப்போம் : முதலாவதாக இடைக்காடு விவசாய பெருமக்களின் பெரு முயற்சியால் இக்குளம் ஒழுங்கமைப்புடன் திருத்தி அமைக்கப்பட உள்ளது. அரசினால் அனுமதி பெற்று இதனை இன்று(04/10/2024)கோண நாச்சியாரின் மேற்பார்வையில் செய்வதற்கு எல்லோரும் இணைந்து செயல்படுகிறார்கள். அதன் ஒரு பகுதியாக அவர்கள் புலம்பெயர்ந்த தேசத்தில் இருப்பவர்களின் நிதி பங்களிப்பினையும் எதிர்பார்க்கிறார்கள். அதை மிகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நேர்த்தியாகவும் நீண்ட ஒரு தொலைநோக்க அடிப்படையிலே உறுதியாக செய்வதற்காக சில ஆலோசனைகளை நாங்களும் முன் வைத்துள்ளோம். அந்த வகையிலே அந்த அணையின் உடைய வேலை திட்டங்கள் நேற்று ஆரம்பமாகியுள்ளது.அதன் முதல் கட்டமாக அவர்கள் அந்த மண்ணை வலித்து அணை மாதிரி அமைத்து, பின்னர் கருங்கல்கள் மிகவும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு மூன்று பக்க அணைகளை இப்போது முதல் படியாக செய்ய இருக்கிறார்கள்.
பின்னர் பொறியியல் துறை வல்லுனர்களின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட வேலை திட்டங்கள் ஆரம்பமாகும்., இந்த கடமைகளை நாங்கள் அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய காலகட்டாயத்தில் இருக்கின்றோம்.அங்கே இருக்கும் விவசாய தோழர்கள் பற்றி உங்கள் மனதில் எழுகின்ற சந்தேகங்கள் என் மனதிலும் எழுகின்றது இருப்பினும் எங்கள் கடமைகளை நாங்கள் எல்லோரும் இணைந்து சரிவர செய்கின்றோம்.

நேரமும் காலமும் ஓடிக் கொண்டிருக்கின்றது., அந்த வேகத்துக்கு நாங்கள் ஈடு கொடுத்து செயல்படுவோமாக இருந்தால் எல்லாத்தையும் வெற்றியோடு நாங்கள் செய்து முடிக்க முடியும். எனவே அனைத்து விவசாய தோழர்களை நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால் உங்களால் முடிந்த குறைந்த அளவான நிதி பங்களிப்பினை செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் குறிப்பாக நான் உங்கள் அனைவரோடும் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும் இன்னும் பல விஷயங்கள் உங்களுடன் கதைக்க வேண்டிய உள்ளது,இருப்பினும் இதை மிக விரைவாக எழுத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதினால் இத்துடன் முடித்து உங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி உங்களில் ஒருவன்.

அறிவுள்ள ஆரோக்கியமான வாழ்வை அமைப்போம்!!! இன்றே செய்வோம் நன்றே செய்வோம்!!!

தொடர்புக்கு 4168170604.

ஜெயகுமார் சுப்ரமணியம்.
05/10/2024.

இதுவரையில் ஒத்துழைப்பு வழங்கியவரின் பெயர் விபரம் இதில் உங்களின் பெயரும் இருக்கிறதா ??? வாருங்கள் விவசாய தோழர்களே அனைவரும் சேர்ந்து வடம் பிடிப்போம்.

மகேஸ்வரன் நாகமுத்து
பொன்னீஸ்வரன் வைரமுத்து
சிவகாமிபிள்ளை சுப்ரமணியம்
சுதர்சன் செல்லத்துரை
இளங்கோ வேலுப்பிள்ளை
ஈஸ்வரமூர்த்தி முருகப்பிள்ளை
நாகேஸ்வரமூர்த்தி தம்பு
நவரதி சந்திரபாபு
பிரேமா சுப்பிரமணியம்
பிரதீபன் நல்லதம்பி
கருணாகரன் நடராஜா
இலக்கியன் ஜெயகுமார்
நவகுமார் சுப்ரமணியம்
பிரசாத்
சிவா ரூபன்likes (0)Comments (0)

துயர் பகிர்வு

இடைக்காட்டை பிறப்பிடமாகவும், சிட்னி Australia வை வதிவிடமுமாக கொண்ட திரு கி். ஜெயஶ்ரீ காலமானார்.
மேலதிக விபரங்கள் விரைவில் பகிரப்படும்

துயர் பகிர்வு


பிறப்பு : 26.03.1930 உதிர்வு: 20 . 01 . 2024
திருமதி. நாகம்மா கணபதிப்பிள்ளை

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 20.01.2024 சனிக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற தபால் அத்தியட்சகர் கந்தையா கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான மயில்வாகனம்-இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான கந்தையா – சிலம்பாத்தை தம்பதிகளின் அருமை மருமகளும், ரோகினிதேவி (America) , சியாமளா (Sri-Lanka ) , சோமாஸ்கந்தா(Canada ), நாகேஸ்வரி (Canada ), அருள்மொழி (Canada ) அருள்மோகன் (Canada ) ஆகியோரின் பாசமிகு அன்னையும் ஆவார். முத்துவேல்,சிவகுமார், விஜயகலா,சுரேஷ்,கிருஸ்னானந்தவேல்,கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும், சுஜா-அமலன், கஜந்தன், தினேசன், துவாரகா, நிருஜன்-சாம்பவி, சிஜானி , பிரசானி, ஜீவிதன் , சதுர்சன் மிதுர்சா , யதுர்சா ஆகியோரின் அன்புப்பேத்தி, அஸ்மி, விகா ஆகியோரின் அன்புப் பூட்டம்மாவும்,
காலம் சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சரவணமுத்து, சிவகாமி அம்மை, கதிரவேலு,அன்னபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மற்றும் வள்ளியம்மை,பரமேஸ்வரி, காலம் சென்றவர்களான ராஜகுலசிங்கம்,சபாரத்தினம்,சரஸ்வதி,சின்னம்மா,செல்லம்மா,பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

Viewing & Cremation
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave
ON , L1S – 2E3
பார்வைக்கு / கிரியை/தகனம்:
அன்னாரின் பூதவுடல் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை பி. ப 5 மணி முதல் பி.ப 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுதினம் இறுதிக்கிரியை 29-01- 2024
திங்கட்கிழமை அன்று முற்பகல் 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
சோமாஸ்கந்தா (மகன்)
416 299-4946
தகவல்: குடும்பத்தினர்.