Articles for 2023

புலம்பெயர்ந்த தேசங்களில் நம்மவர்களின் கூத்துக்கள்

வருகின்ற சில நாட்களுக்கு குளிர் நாட்களாகவே  இருக்கப் போகின்றது., இருப்பினும் இவை அனைத்தையும் கடந்து செல்வது தான் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற அனைவருடைய தினசரி வாழ்க்கையாக அமைந்துள்ளது .இந்த வகையிலே இன்றைய கருத்தாடல்களில் உன்னிப்பாக நாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலே அவதானித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று விளைகின்றோம் .குறிப்பாக ஒரு மனிதனுடைய வாழ்வில் முழுமை பெற்று இறுதியாக அவனுடைய வாழ்வை இவ்வுலகில் முடித்துச் செல்லும்போது தமிழ் சமூகங்களிலே மேன்மையான இறுதி வணக்கங்களையும் அல்லது அவர்களுக்குரிய மரியாதைகளையோ நாங்கள் செலுத்துவது வழமையான ஒன்று. அந்த வகையிலே இங்கு நாங்கள் உன்னிப்பாக அவதானித்த சில விடயங்களை வெளிக்கொண்டு வருவது எமது கலாச்சாரத்தை எமது  பழக்க வழக்கங்களை சற்று சீர்தூக்கி பார்க்க வேண்டிய ஒரு தேவை இருப்பதாகவே உணர்கின்றோம். 

 இறுதி வணக்கத்துக்கு அல்லது அஞ்சலி செலுத்தும் மண்டபத்துக்கு நாம் செல்லும்போது அவதானித்த சில விடயங்களை பார்ப்போம்.

ஆண்கள் வெள்ளை சட்டை அல்லது கருப்புச்சட்டை அதனுடன் கருப்பு நிறத்தில் ஆன முழுகால் சட்டை  அணிந்து வருகிறார்கள்’ ஆனால் அவர்கள் அஞ்சலி செலுத்தும் இடத்துக்குச் செல்லும்போது தலையில் தொப்பி, அதற்கு மேலே குளிருக்கு போடுகின்ற ஓவர் கோட், கண்ணாடியை தலைக்கு மேலே வைத்தல், பாத அணிகளுடன் அந்த இடத்திற்கு செல்லல், மேலும் இரண்டு பட்டனை சட்டையிலிருந்து கழட்டி மேலும் அதற்கு மேலே ஒரு ஓவர் கோட்டை போட்டுக் கொண்டு அந்த அஞ்சலிக்கு அவர்கள் செல்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.

சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள் நாங்கள் பாடசாலைக்குப் போகும் போதும் அல்லது பேருந்துக்கு செல்வதற்கோ அல்லது அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது ஒரு ஒழுங்கு முறையில் மற்றவர்களை மதித்து நடக்க  பழகிய நாங்கள் எமது கலாச்சாரமும் ஒரு அஞ்சலிக்காக செல்கின்ற இடத்தில் ஒரு கோமாளிக்கூத்தாக நடப்பதை எண்ணி வெட்கப்பட வேண்டாமா?

இங்கு எவ்வளவோ அதீத வசதிகள் உள்ள ஒரு தேசம் ,மண்டபத்துக்கு குளிர்காலத்தில் வெப்பமூட்டியும், ஓவர் கோட்  வைப்பதற்கு  அதற்குரிய வசதிகளும்,பாதணிகள் பத்திரமாக கழட்டி வைப்பதற்குரிய இடங்களும், இன்னோரன்ன சகல  வசதிகள் உள்ள இத் தேசத்தில் ஒரு கேலிக்கூத்தாக ஒரு மனிதனுடைய இறுதி அஞ்சலிக்கு நாங்கள் செய்கின்ற  செயல்களை என்னவென்று சொல்வது??!!! உறவுகளே! சிந்திப்போம்!! தாய்க்குலத்துக்கு தலை சாய்த்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஏனெனில் அவர்கள் முழுமையாக கலாச்சாரத்தையும் அவர்களுக்குரிய அஞ்சலிகளையும் செவ்வனே செய்கின்றார்கள்., என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.வருகின்ற கிழமையும் உறவுகளின் அஞ்சலிக்காக நாம் சந்திக்க இருக்கின்றோம். புதிய ஒரு அத்தியாயத்தை உங்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் சொல்வோம் நன்றியுடன் .

கடுமையான பனிப்புயலால் ரொறன்ரோ

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் தலைநகரான ரொறன்ரோவில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகின்றது.

பனிப்புயல் காரணமாக பஸ் போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் வீதிகள் முற்றாக மறைந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை.பாதிப்படைந்துள்ளது.

இடைக்காடு ம.வி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் இடைக்காடு ம.வி தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்.

35 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 70 புள்ளிகளுக்கு மேல் 94.28 வீதம்(%) மாணவர்களும்.,
100 புள்ளிகளுக்கு மேல் 82.85 வீதம்(%) மாணவர்களும்.,
12 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களுக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும், ஆக்கமும் ஊக்கமும் அளித்த பெற்றோர்களுக்கும், பரீட்சையில் சித்தி அடைந்த மாணவச் செல்வங்களுக்கு இடைக்காடுவலை இணையத்தின் வாழ்த்துக்கள்.

மதிவாணன் அக்சயா – 183
சிறிபதி திசானி -174
யுஸ்ரின் கென்றி -172
சிறிசேதுபரன் றட்சிகா -169
திலீபன் தரணிகா -167
சத்தியசீலன் கபிசன் -166
ருபிதரன் அகாஸ்ரெனின் -160
இராகவன் துசந்தி -157
றயினோல்ட் சுவேதா -156
அருள்ரூபன் திசானி – 151
நகுலன் கேசகி -144
கணேசவேல் கபித் – 144

தகவல் : பழைய மாணவன்

வரவேற்பு விழா

யா/இடைக்காடு மகாவித்தியலயத்திற்கு புதிய அதிபராக திரு. குமாரசாமி அகிலன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை வரவேற்கும் நிகழ்வு 19.12.2022 திங்கட்கிழமை காலை 7:30 மணிக்கு ஆரம்பமானது.

நிகழ்வினை பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு படுத்தி நெறிப்படுத்தியிருந்தது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் எமது பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள், பெற்றோர்கள்,வெளி நாட்டு வாழ் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

வரவேற்பு உரையினை தொடர்ந்து பாடசாலையின் பிரதி அதிபர், திருமதி.க. லலீசன், ஓய்வு நிலை கல்வி பணிப்பாளர் திரு. க. முருகவேல், எமது பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர்களான திரு. அ. அருந்தவனேசன், திரு. கு. வாகீசன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு. நா. சுவாமினாதன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. ச. ஶ்ரீபதி, பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. கஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றியிருந்தனர்.

இறுதியாக புதிய அதிபரின் ஆரம்ப உரையுடன் நிகழ்வு காலை 8:30 மணிக்கு நிறைவடைந்தது.

எமது பாடசாலையின் புதிய அதிபரை இடைக்காடுவலை இணையமும் வாழ்த்தி மென்மேலும் வளர்ச்சிப் பாதையில் செல்வோமாக…

அதிகாலைப் பொழுது

அதிகாலை கனடாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது .இன்று உயர்தர மாணவர்களுக்கான பரிட்சைகள் ஆரம்பம்., எமது மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் தங்களுடைய திறமைகளை காட்டி பரீட்சைகளை எதிர்கொள்வதற்கு நாம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் உறுதுணையாகவும் இருப்போமாக.

Beautiful Idaikkadu

இப் பதிவானது அழகிய இடைக்காடு என்ற தளத்தில் இருந்து, ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு காலத்தின் தேவையும் இன்றைய சூழ்நிலையும் கருத்தில் கொண்டு இதை பதிவு செய்கின்றோம். நன்றி. அழகிய இடைக்காடு முகநூல் குழுவினருக்கு.

Our village development is service attitude! Too much hard work! Village progress in moments when planned agriculture, pedestrian farming, manpower (gardening assistants) reducing or avoiding, excellence in education. It will last ! The reality is that the village community face reaches a bright happy state when such a rapid development takes place, the entire village will glow into a beautiful and special village! In that way, they are Malavalu Thambu in the past! Mr. Samangalatti Kandasamy! Vadivel will not have any help to release the family members. They will sell the sheep as a sheep bar (farm) which has the human strength of the family members with the human strength of their family members and give the damaged sheep for the agricultural lands Earned a significant income from their (children & adult goats) and the income was with them total harmless! Because no external helpers manpower is included to work here! So when doing agricultural activity or anything else Manpower can reap the benefits of cultivating by choosing family members or manpower extra unwanted crops! IN that way, a government servant who established himself in our village through marriage from outside, has used crops like cashew nuts, flags, sunflower, meat drumsticks, drum stickers, etc. It is his effort and passion that the maturity of cultivating and taking agricultural activities by avoiding money wastage for human strength. It is a beautiful truth that by uplifting more will make our village beauty stronger! Beauty is that you can always see beauty even in the farming which is done with quality and efficiently! Picture Credits to N. Kumar ( Thank you )

அறிவோடும் சிந்தனையோடும் சில நிமிடங்கள்

 உறவுகளே!!

நாம் இங்கு எழுதுகின்ற கருத்துக்கள் ஏற்கனவே பல சான்றோர்களாலும் முன்னோர்களாலும் எழுதப்பட்டவை. அவற்றை கற்றுக் கொண்டதும் விளங்கிக் கொண்டதன் அடிப்படையில் இதை  தொகுத்து உங்களுக்கு வழங்குகின்றோம். இதன் ஊடாக இலகு முறையில் நமது வாழ்வியலை எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றோம். நாம் பெற்ற பயன்களை நீங்களும் பெற்று வாழ்வியலில் முன்னேறுவீர்களாக!!!

நன்றியுடன் இணையவாசிகள்.

நமது முன்னேற்றத்தை தடுக்கும்…..

வெட்கம் (Shyness) ஒரு தொழிலை செய்யும் பொழுதோ அல்லது ஒரு செயலை தொடங்கும் பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா(?) அதற்கு நமக்கு தகுதி இருக்கா(?) அதில் தோல்வி அடைந்தால் மற்றவர்கள் கேலி(!!) செய்வார்களே! என்று வெட்கப்பட்டால் முன்னேற முடியாது .

பயம் (Fear)  இதனை நம்மால் செய்ய முடியுமா(?) அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது.

தாழ்வுமனப்பான்மை ( Poorself-image) அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை., அவங்களுக்கு அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்லை., என நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளுதல்.

 நாளையவாதிகள் (Procrastination) எந்தச் செயலையும் நாளை நாளை என தள்ளி போட்டு கொண்டே செல்லுதல்.

 சோம்பல் (Laziness) சாக்குப் போக்கி எந்த செயலையும் செய்யாமல் இருப்பது

பிற்போக்கான பழக்க வழக்கம்(Negative Habits) பிற்போக்கான எண்ணங்கள் அல்லது கீழ்த்தரமான செயல்களையும் அவற்றுக்கான சிந்தனைகளையும் பழக்கவழக்கங்களாக வைத்துக் கொள்ளுதல்.

எதிர்மறை எண்ணங்கள்(Negative thoughts) எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும் அதை நீக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகின்றோம்.

மேலே எழுதிய கருத்துக்கள் நாம் கற்றுக் கொண்டவைகளும் அனுபவ ரீதியாக பெற்றவையும் ஆகும். இவற்றை எழுதுவது இலகு, ஆனால் அதை வாழ்வியலில் கடைப்பிடிப்பதும் அந்த நெறிமுறையை சரியாக ஒழுங்குபடுத்தி செய்வதும் கடினத்திலும் கடினம்., இருப்பினும் வாழ்வியல் என்பது இவை அனைத்தையும் தாண்டி கடந்து வாழ்ந்து காட்டுவது தான். இப் பிறப்பிலேயே பிறந்த வாழ்வுக்கு எங்கள் வாழ்வு முன்னுதாரணங்கள் ஆகும். ஆகவே மேற் கூறிய சில கருத்துக்களில் இருந்து நாங்கள் எங்களை சற்றேனும் மாற்றுவோமாயின் ஓர் ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான,வீரியமிக்க ஒரு சமுதாயத்தை நாங்கள் உருவாக்க முடியும் என்பதில்  சந்தேகம் இன்றி உறுதியோடு நாங்கள் இருக்கின்றோம். 

நன்றியுடன் அடுத்த பதிவில்.. 

வலைதளங்களில் இருந்து

உறவுகளே ஒரு சமூகம் வலுவான நேர்த்தியான பாதையில் செல்வதற்கு இப்படியானஅறிவு பூர்வமான அல்லது எங்கள் தலங்களை வலுப்படுத்தக்கூடிய கருத்துக்களையும் படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தால் நாங்கள் அதை எம் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுவது மேலும் வளர்ச்சிக்கு உதவும் என வேண்டுகின்றோம் நன்றியுடன் மீண்டும்

பட்டமளிப்பு விழா

கனடாவில் இடைக்காட்டினைச் சேர்ந்த மூத்த குடியினர் திருமதி. கங்காதேவி நல்லதம்பி மற்றும் திரு. நல்லதம்பி சிதம்பரப்பிள்ளை அவர்கள் இருவரும் யோகாசன பயிற்சியினை நிறைவு செய்து தமது பட்டமளிப்பு விழாவினை நிறைவு செய்துள்ளார்கள்.அவர்களை நாம் நிறைவான ஆரோக்கியமான மென்மேலும் முன்னுதாரண பணிகளை செய்து மேலும் நமது கிராமத்துக்கும் எமது சமூகத்துக்கும் எமது இனத்துக்கும் நற்பெருமை சேர்த்து நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம். நன்றி.

இது ஒரு புதிய தொடக்கம்

எமது இனிய உறவுகளே வணக்கம்.!!!

நாம் நேசித்த மண்ணும்,வீடும், சுற்றமும், நாம் வாழ்ந்த கிராமமும் எமக்கு தொலைதூரமாகி  வெகுநாட்கள் சென்று விட்டன. புலம்பெயர்ந்த தேசங்கள் எமது நிரந்தர முகவரிகள் ஆகின.எல்லோர் மனதிலும் எங்கோ ஓரிடத்தில் எமது பழைய நினைவுகள் வந்து வந்து சென்று தான் போகின்றது.இப்போது புலம்பெயர்ந்த தேசங்களில் இரண்டாவது தலைமுறையினர் வாழ்வை ஆரம்பித்துள்ளார்கள்.இருப்பினும் நாம் எங்கு வாழ்ந்தாலும் எப்படி வாழ்ந்தாலும் எமது மண்ணில் வாழ்ந்த காலங்களை நினைக்கும் போதெல்லாம் மனதில்  மகிழ்ச்சியும் புத்துணர்வும் ஏற்படுகின்றது.

இத்தரணத்தில் எமது இளைய தலைமுறையினருக்கு ஒரு சரியான அடித்தளத்தை புலம்பெயர்ந்த தேசத்திலும் எமது தேசத்திலும் இளையோர்கள் மத்தியில் உருவாக்க வேண்டிய ஒரு கடமை பாட்டில் நாம் அனைவரும் ஒரு புள்ளியில் இணைய முனைகின்றோம்.அவர்களுக்கு எம்மாளான  அடிப்படை உதவிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமைப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் அல்லவா<>?

கல்வி வளர்ச்சிக்கு பலமான அத்திவாரம் இடுவதும், பொருளாதாரத்தில் தன்னிறை கொண்டு வருதலும், சுய தொழில் முயற்சிக்கு கை  கொடுப்பதும், ஆரோக்கியமான சுகாதார சூழ்நிலையில் வாழ வைப்பதும் ஒரு பலமான ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவதும் எமது நோக்கமாக அமைகின்றது.

மேற்கூறிய குறிக்கோளை அடைவதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். தனித்துவத்தையும்,கலாச்சார செழுமையையும், நம் இனத்தின் விளிமியங்களையும், ஒரு நல்ல உன்னதமான வளர்ச்சியான சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு இதை ஒரு ஆரம்ப நாளாகவும் ஆரம்ப புள்ளியாகவும் தமிழர் திருநாளாம் தை திருநாளில் ஆரம்பிக்கின்றோம் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் அனைவருக்கும் எமது பொங்கல் தின நல் வாழ்த்துக்கள் மீண்டும் சமூக வலை அமைப்பின் ஊடாக மீண்டும் இணைவோம்.